சென்னையிலிருந்து 22,797 சிறப்பு பேருந்துகள்...! பயணிகளுக்கு பொங்கல் பண்டிகை பரிசு...! - Seithipunal
Seithipunal


தமிழர் திருநாளான தைப்பொங்கல் வரும் ஜனவரி 15-ஆம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், பண்டிகையை சொந்த ஊரில் குடும்பத்துடன் கொண்டாடும் நோக்கில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பயணத் தயாரிப்பில் இறங்குகின்றனர்.

இந்த பெருமளவு பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் போலவே தமிழக போக்குவரத்துத் துறை இந்த ஆண்டும் சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளது.

இதற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து மட்டும் 22,797 சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், வரும் 9-ஆம் தேதி முதல் இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், பயணிகள் தேவைக்கு ஏற்ப தனியார் பேருந்துகளையும் வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகள் சிரமமின்றி பாதுகாப்பாக பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

22797 special buses from Chennai Pongal festival gift passengers


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->