சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 22 ஆண்டுகள் சிறை..போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
22 years imprisonment for the person who sexually assaulted the minor Shocking verdict from the POCSO court
கோவில்பட்டியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 22 ஆண்டுகள் சிறை தணடனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழகத்தில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக சொல்லப் போனால் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு ஆனது அளிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் மாணவிகளை பாலியல் சீண்டலில் ஈடுபடுத்துவது போன்ற குற்ற செயல்களும் நடந்தேறி வருகிறது.இப்படி நடைபெறும் பாலியல் குற்றவாளிகளை போக்சோ சட்டத்தில் கைது செய்து தணடனை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த மாடசாமி(எ) மகேஷ் என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா நேற்று முன்தினம், குற்றவாளி மாடசாமி(எ) மகேஷ் என்பவருக்கு 22 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தார் , மேலும் ரூ.12 ஆயிரம் அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ,நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் , விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் அமிர்தஜோதி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 22 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது
English Summary
22 years imprisonment for the person who sexually assaulted the minor Shocking verdict from the POCSO court