21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! - Seithipunal
Seithipunal


ஊட்டியில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததுஅரசு பள்ளிக்கு பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீசார் சென்றபோது இந்த பாலியல் சம்பவம் அம்பலமாகியது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள ஹோப் பார்க் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்.இவர் கடந்த 23 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராக பல்வேறு அரசு பள்ளிகளில் பணியாற்றி உள்ளார். இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊட்டி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் பணியில் சேர்ந்த அவர் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அறிவியல் பாடம் எடுத்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளிக்கு பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் சென்றபோது உடலில் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து மாணவ- மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது பள்ளியில்  ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார், பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ளார்.

அதையடுத்து நடததப்பட்ட விசாரணையின் முடிவில் பள்ளியில் படித்த 21 மாணவிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து  போலீசார், இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து  ஊட்டி ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.

இந்த நிலையில் செந்தில்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா கலெக்டருக்கு பரிந்துரை செய்ததைத்தொடர்ந்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டார். இந்த நிலையில் ஊட்டி கிளை சிறையில் இருந்த செந்தில்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

21 female students were sexually harassedThe Goonda Act was invoked against the teacher


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->