சினிமா பாணியில் மூதாட்டி வீட்டில் ஓட்டை பிரித்து 20 சவரன்,பணம் கொள்ளை! - Seithipunal
Seithipunal


புவனகிரி அருகே மூதாட்டி வீட்டின் ஓட்டை பிரித்து 20 சவரன் நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த பு மனவெளி கிராமத்தை சேர்ந்தவர் மறைந்த பாண்டுரங்கனின் மனைவி பூபதி. இவர்களுக்கு ஐந்து மகன்கள் உள்ளனர். அனைவரும் திருமணம் ஆகி வெளியூர்களில் தங்கி உள்ளதால் பூபதி மற்றும் வீட்டில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

பூபதி தனியாக வீட்டில் வசித்து வருவதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி  வீட்டில் இருந்த பீரோவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 சவரன் நகை மற்றும் ரூபாய் 15,000 பணத்தை  கொள்ளையடித்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதிகாலையில் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பூபதி பீரோவை ஆராய்ந்து பார்த்த பொது பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பணம் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக உறவினர்களிடம் இது குறித்து தகவல் தெரிவித்தார்.

பின்னர் சம்பவம் அறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்த புவனகிரி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நகை மட்டும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பு மனவெளி பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

20 Savaran jewels and cash were stolen from the house of an elderly woman near Bhuvanagiri


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->