தெருநாய்கள் அட்டகாசம்! திருக்கோவிலூரில் நாய்கள் கடித்து 20க்கும் மேற்பட்டோர் காயம்!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் சுமார் 20க்கும்  மேற்பட்டோரை தெரு நாய்கள் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது நாய் கடி சம்பவங்கள். சென்னையில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து நாயின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். பின்னர் மாநகராட்சி ஆணையர் வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பதற்கு மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும் என்று அறிவித்தார்.

அதனை தொடர்ந்து தமிழ்நாட்டை பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நாய் கடி சம்பவங்கள் நடந்து வருவது வேதனைக்குரிய ஆன உண்மை. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த சுமார் 20க்கும் மேற்பட்டோரை தெரு நாய்கள் கடித்துள்ளது.

காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாய்க்கடி சம்பவங்கள் அதிகரிப்பதாலும் நாய்களால் விபத்து ஏற்படுவதாலும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 people were injured after being bitten by dogs in Thirukovilur


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->