மின் ஊழியரை தாக்கியவருக்கு 2 ஆண்டுகள் சிறை..நீதிமன்றம் அதிரடி!
2 years imprisonment for the attacker of the electrician Courts shocking decision
திருநெல்வேலி மாவட்டம்,அருகே மின் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து திருநெல்வேலி மூன்றாவது குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், வடக்கு தாழையூத்தைச் சேர்ந்த ஜேம்ஸ்ராஜ் என்பவர் , டவுண் பகுதியை சேர்ந்த மின் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மின் ஊழியர் அளித்த புகாரின் பேரில், தாழையூத்து காவல்துறையினர் வழக்காக பதிவு செய்து ஜேம்ஸ்ராஜை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மூன்றாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று நீதித்துறை நடுவர் ஜெய சங்கரகுமாரி குற்றம் சாட்டப்பட்ட ஜேம்ஸ்ராஜிக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு IPC 294(b)ன்படி மூன்று மாதங்கள் சிறை தண்டனை, IPC 355ன்படி இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார் ,இதேபோல IPC 353ன்படி இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை துரிதமாக மற்றும் திறம்பட கண்காணிப்பு செய்த டி.எஸ்.பி. மற்றும் தாழையூத்து காவல் நிலைய அலுவலர்களையும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்குரைஞர் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
English Summary
2 years imprisonment for the attacker of the electrician Courts shocking decision