தற்கொலை முயற்சி: பள்ளியில் சானிடைசரை குடித்த 2 மாணவிகள்.! மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் தற்கொலை செய்து கொள்வதற்காக பள்ளியில் சானிடைசரை குடித்த இரண்டு மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியும், தோழிபட்டணம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமியும் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் பள்ளியில் கொடுக்கப்பட்டது.

இதில் இவர்கள் இரண்டு பேரும் அறிவியல், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் வீட்டில் பெற்றோர்கள் திட்டுவார்கள் என்ற பயத்தில் இருந்து உள்ளனர். இந்நிலையில் இரண்டு பேரும் தற்கொலை செய்து கொள்வதற்காக முடிவு செய்து குடிநீரில் சானிடைசரை கலந்து பள்ளியில் குடித்துள்ளனர்.

இதையடுத்து இரண்டு பேரும் வாந்தி எடுத்ததால், ஆசிரியர்கள் இது குறித்து மாணவிகளிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்காக சானிடைசரை குடித்ததாக கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் இதுகுறித்து மாணவியின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்பு உடனடியாக இரண்டு மாணவிகளையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்து சூலூர் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 students admitted to hospital after drinking sanitizer at school


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->