விழுப்புரம்: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து - 2 விவசாயிகள் உயிரிழப்பு
2 farmer killed in motorcycle car collision in Villupuram
விழுப்புரம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கி.முத்தாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் ரவி(47), ராஜவேல்(35). விவசாயிகளான இவர்கள், ஊருக்கு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தங்களது விளை நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் இன்று காலை சென்றனர்.
பின்பு விளைநிலத்தில் இருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தபோது, சென்னை நெடுஞ்சாலையில் எதிரே வந்த கார் ஒன்று திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ரவி மற்றும் ராஜவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த விழுப்புரம் போலீசார், உயிரிழந்த 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
2 farmer killed in motorcycle car collision in Villupuram