இந்த 2 நாட்கள் சென்னை- நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்!
2 days Vande bharath special train Chennai to nagercoil
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்னகர ரயில்வே பல்வேறு நகரங்களுக்கு பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது.
அந்த வகையில் சென்னையில் இருந்து நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இரு மார்க்கங்களிலும் இன்று, நாளை என இரண்டு நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 5 மணி அளவில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் வந்தே பார்த் ரயில் மாலை 1. 45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
மீண்டும் மதியம் 2.05 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் இரவு 11:35 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
English Summary
2 days Vande bharath special train Chennai to nagercoil