மதுரை: லாரியுடன் 1000 கிலோ கஞ்சா பறிமுதல்.! 2 பேர் கைது - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் 1000 கிலோ கஞ்சாவை லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

மதுரை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆந்திராவில் இருந்து மதுரைக்கு லாரியில் கஞ்சா கடத்துவதாக எஸ்.எஸ் காலனி காவல் நிலையம் இன்ஸ்பெக்டருக்கு ரகசிய தகவல்களை கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார் மதுரை கோச்சடை சோதனை சாவடி பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது அவ்வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தியபோது, அதிலிருந்த இரண்டு பேர் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து லாரியில் இருந்த மற்ற இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் மதுரை மேலவீதியை சேர்ந்த பிரபாகரன் மற்றும் கோவை மாவட்டத்தை சேர்ந்த செந்தில் பிரபு என்பதும், அவர்கள் விஜயவாடாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்தச் செல்ல முயன்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இவர்கள் இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், லாரியில் இருந்த சுமார் 1000 கிலோ கஞ்சாவையும், லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கஞ்சா கடத்தல் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய 2 பேர் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 arrested for smuggling 1000 kg Ganja in madurai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->