இல்லத்தரசிகளுக்கு இன்பதிர்ச்சி கொடுத்த தங்கத்தின் விலை.. இன்றைய விலை நிலவரம்.!
14.06.2022 good price
உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.
அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

இந்த நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 760- ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.37,920-க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.95 குறைந்து, ரூ.4,740-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.30 காசுகள் குறைந்து, ஒரு கிராம் ரூ.66-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.66,000-க்கும் விற்பனையாகி வருகிறது.