சானிடைசர் போட்டு டிவியை சுத்தம் செய்ததால், பாழான டிவி.. பெற்றோர்களின் பேச்சிற்கு பயந்து சிறுவனின் விபரீதம்.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரை சார்ந்தவர் வடிவேல். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வடிவேலின் மனைவி கவிதா. கவிதா தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் பிரைட் ஷாம் என்ற 14 வயது மகன் இருக்கிறார். 

இவர் அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். தற்போது கொரோனா பரவல் காரணமாக சிறுவன் வீட்டில் இருந்த நிலையில், நேற்று தீடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

ஷாமை தேடி வந்த நண்பர்கள், ஷாம் தூக்கில் தொங்குவதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். பின்னர் இவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் வீட்டிற்கு வந்த பெற்றோர்கள், சிறுவனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஷாம் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர். பின்னர் இது குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சிறுவன் சானிடைசர் கொண்டு தொலைக்காட்சியை துடைத்ததும், இதன்பின்னர் டி.வி பழுதடைந்ததால் பெற்றோர்கள் திட்டுவார்கள் என்று எண்ணி தற்கொலை செய்துகொண்டதும் அம்பலமாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

14 Year child suicide at Chennai Kundrathur Police Investigation


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->