13,500 ஆபாச வீடியோக்கள்..பெண்களை வீழ்த்தும் உல்லாச வாலிபர்..சிக்கியது எப்படி?
13,500 Videos The young man who beats the women. How did you get caught?
இளம்பெண்களின் பெயரில் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். வீடியோ காலில் நிர்வாணமாக பெண்களை வரவைத்து உல்லாசமாக இருந்த வாலிபர் சிக்கியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் சண்டூர் பகுதியை சேர்ந்தவர் சுபம் குமார் மனோஜ் .25 வயதான இவருக்கு சமூக வலைதளம் மூலம் பல இளம்பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் காதல் பெயரில் இளம்பெண்களை தனது காம வலையில் விழ வைத்துபின்னர் அந்த இளம்பெண்களிடம் வீடியோ அழைப்பில் பேசிய அவர் நிர்வாணமாக வரும்படி வற்புறுத்தி வந்துள்ளார்.
தனது ஆசைக்கு இணங்க மறுக்கும் இளம்பெண்களின் பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் தொடங்கி அந்த பெண்கள் பெயர் மட்டுமின்றி புகைப்படத்தையும் பயன்படுத்தி ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இதில் சமீபத்தில் பாதிக்கப்பட்ட மும்பையை சேர்ந்த கல்லூரி மாணவி தனது பெயரில் போலி கணக்கு தொடங்கி சில ஆபாச வீடியோக்களை சுபம் குமார் வருகிறார் என
மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுபம் குமாரை தேடி வந்தநிலையில் டெல்லியில் இருந்து அவர் சொந்த ஊரான பல்லாரி மாவட்டம் சண்டூருக்கு வந்து தலைமறைவாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பல்லாரி வந்த மும்பை போலீசார் சுபம் குமாரை கைது செய்தனர்.
விசாரணையில் சுபம் குமார் 10 போலி சமூக வலைதள கணக்கு தொடங்கி இதற்காக 90-க்கும் அதிகமான இ-மெயில் கணக்குகளை அவர் தொடங்கி பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரது செல்போனில் பல பெண்களின் 13,500 ஆபாச வீடியோக்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
சுபம் குமாரை மும்பைக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
13,500 Videos The young man who beats the women. How did you get caught?