நாமக்கல் : முட்டை விலை திடீர் சரிவு.. இன்றைய விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஹைதராபாத் மண்டலத்தில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், புரட்டாசி நெருங்குவதால் மக்களிடையே முட்டை நுகா்வு சரிந்துள்ளதாலும் விலையில் சற்று மாற்றம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று முதல் (செப்டம்பர் 12ஆம் தேதி) முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12.09.2022 egg price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->