பெரம்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் மர்ம பையில் கிடந்த 12 கிலோ கஞ்சா பொட்டலங்கள்..!
12 Kilograms of Ganja Packets Found in a Mysterious Bag on the Tracks at Perambur Railway Station
பெரம்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் கிடந்த மர்ம பையில் இருந்து 12 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
வழக்கம்போல சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நடைமேடை 02 மற்றும் 03க்கு இடையே உள்ள பகுதியில் கிடந்த ஒரு மர்ம பையில் சோதனை செய்துள்ளனர். அவை அவர்கள் திறந்து பார்த்த போது அதில் கஞ்சா பொட்டலம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதன் பெறுமதி சுமார் 12 கிலோ கஞ்சா எனவும், இதன் மதிப்பு 06 லட்ச ரூபாய் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த கஞ்சாவை திருவல்லிக்கேணி உள்ள மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கஞ்சா கடத்தி வந்தவர்கள் யார், எதற்காக ரயில் நிலையத்தில் போட்டுவிட்டு சென்றார்கள் என்று விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
12 Kilograms of Ganja Packets Found in a Mysterious Bag on the Tracks at Perambur Railway Station