இன்று முதல் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஆரம்பம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் முதல் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான 12-ம் பொதுத்தேர்வு கடந்த 1-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று முதல் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இன்று தமிழ் உட்பட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 தேர்வு மையங்களில் 8.25 லட்சம் பேர் எழுத உள்ளனர்.

பொதுத்தேர்வுக்கான அறைக்கண்காணிப்பாளர் பணியில் 46,700ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வின் போது நடைபெறும் முறைகேடுகளை தடுப்பதற்கு 4,334 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வறைக்குள் செல்போன் உட்பட மின்சாதனம் கொண்டுவர தடை உள்ளது.

நுழைவுச் சீட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும். மாணவர் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள் விடைத்தாளுடன் சேர்த்து வழங்கப்படும். அதனை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட்டால் போதும். மேலும், அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11th public exam start from today


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->