11 மற்றும் 12-ம் வகுப்பு துணைத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் எப்போது.? அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


11 மற்றும் 12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 15-ம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள், தோல்வி அடைந்த மாணவர்களுக்கு கடந்த மாதம் துணைத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், 11 மற்றும் 12-ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வரும் 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலும், தனித் தேர்வு மாணவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் இந்த சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11th and 12 Supplementary Exam mark sheet from sep15


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->