விளையாடிக் கொண்டிருந்த 11 வயது கார்த்திகா... சுவர் இடிபாடில் சிக்கி பலி...!
11 year old Karthika who playing killed by falling wall
திருச்சியில் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த சிறுமி 'கார்த்திகா'. அந்த சிறுமிக்கு 11 வயது.அந்த சிறுமி அப்பகுதியிலுள்ள பள்ளியில் படித்து வந்தார். இதனிடையே, இன்று வீட்டின் அருகில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென சுவர் இடிந்து கீழே விழுந்து தரை மட்டமாகி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் சிறுமி கார்த்திகா பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், அந்த இடிபாடுகளுக்குள் சிக்கிய அவரது உறவினர் கொளஞ்சியம்மாள் தீவிர காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
11 year old Karthika who playing killed by falling wall