102 நாட்கள், ரூ.19 கோடி...பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடுமை! - Seithipunal
Seithipunal


பெண் மருத்துவர் ஒருவரை மோசடிக்காரர்கள் சுமார் 3 மாதங்களாக 'டிஜிட்டல் கைது' செய்து வைத்திருப்பதாக கூறி ஏமாற்றி, அவரிடம் இருந்து சுமார் ரூ.19 கோடி பணத்தை பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த மார்ச் மாதம் பெண் மருத்துவருக்கு ஒரு மொபைல் அழைப்பு வந்துள்ளது. அப்போது மறுமுனையில் பேசிய ஜோதி விஸ்வநாத்  என்பவர் தொலைதொடர்புத்துறையில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அந்த பெண்ணிடம்  சப்-இன்ஸ்பெக்டர் , அரசு வழக்கறிஞர்கள் என   அறிமுகம் ஆகியுள்ளனர்.

இதேபோல விடாமல் அடுத்தடுத்து அரசு அதிகாரிகள் போலவும், காவல்துறை மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் போலவும் பல பேர் பெண் மருத்துவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதனால் ஒரு மிகப்பெரிய விசாரணை வளையத்திற்குள் சிக்கிவிட்டோம் என எண்ணிய பெண் மருத்துவர்

அவர்கள் கேட்ட விவரங்களை கொடுத்த பின்னர், பல்வேறு வங்கி கணக்குகளில் பணத்தை டெப்பாசிட் செய்யுமாறு கூறியுள்ளனர். 

விசாரணை முடிந்த பிறகு பணம் திருப்பி அனுப்பப்படும் என்று அவர்கள் கூறியதை நம்பி, பெண் மருத்துவர் தனது வங்கி கணக்கில் இருந்த சுமார் 19 கோடி ரூபாய் பணத்தை மோசடிக்காரர்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இவ்வாறாக 102 நாட்கள் 'டிஜிட்டல் கைது' மோசடியில் சிக்கி பெரும் துன்பத்திற்கு ஆளான பெண் மருத்துவர், இறுதியாக காவல்துறையினரிடம் சென்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், சந்தேகத்தின்பேரில் லால்ஜி ஜெயந்திபாய் பல்தானியா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மோசடியில் கம்போடியா நாட்டை சேர்ந்த சைபர் கிரைம் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

102 days Rs 19 crore the atrocities faced by the female doctor


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->