நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..! - Seithipunal
Seithipunal


கும்பகோணம் சார்பில் நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக நிர்வாக இயக்குநர் க.தசரதன் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா 21.11.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 30.11.2025 அன்று சந்தனகூடு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வருகைதர உள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆணைக்கிணங்கவும், போக்குவரத்துத்துறை அமைச்சரின் வழிக்காட்டுதலின் படியும் நாகூர் கந்தூரி திருவிழாவினை முன்னிட்டு 21.11.2025 முதல் 01.12.2025 வரை சென்னை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிதம்பரம், இராமநாதபுரம், தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்தும், நாகப்பட்டினம் - நாகூர் மற்றும் காரைக்கால் - நாகூர் வழித்தடத்திலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

அத்துடன், தினசரி இயக்கப்பட்டு வரும் 127 பேருந்துகள் வாயிலாக 335 நடைகளுடன் 21.11.2025 முதல் 01.12.2025 வரை கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகள் இயக்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை ஒருங்கிணைக்க நாகூர் மற்றும் நாகப்பட்டினம் பேருந்து நிலையங்களில் விசாரணை மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் குறித்த சிறப்பு  பேருந்து சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டுமென நிர்வாக இயக்குநர் க.தசரதன் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

100 special buses to operate for Nagore Dargah Kanduri festival


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->