புரசைவாக்கம் துணிக்கடையில் 10 கிலோ செம்பு வயர் அபேஸ்...! - சிசிடிவி உதவியுடன் கைது செய்த வேப்பேரி காவலர்கள் - Seithipunal
Seithipunal


சென்னையின் புரசைவாக்கம் பகுதியில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வந்த துணிக்கடையில் இடம்பெற்ற செம்பு வயர் திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் (27), சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கட்டுமான மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

நிறுவனத்தின் பொறுப்பில், புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள துணிக்கடையை புதுப்பிக்கும் பணிகளை கவனித்து வந்த அவர், கடந்த 16-ம் தேதி இரவு பணிகளை முடித்து வெளியேறியுள்ளார்.

ஆனால், மறுநாள் காலை மீண்டும் பணிக்காக கடைக்கு திரும்பியபோது, அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மின்சார செம்பு வயர்கள் மர்மமாக காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது.இந்த புகாரின் பேரில், வேப்பேரி காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கினர்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை நுணுக்கமாக ஆய்வு செய்தபோது, இளைஞர் ஒருவர் செம்பு வயர்களை திருடிச் சென்ற காட்சிகள் தெளிவாக பதிவாகியிருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது புரசைவாக்கம் திடீர் நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் என அழைக்கப்படும் கஜா (27) என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவரை காவலர்கள் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.9 ஆயிரம் மதிப்பிலான சுமார் 10 கிலோ எடையுடைய செம்பு வயர்களை பறிமுதல் செய்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10 kg copper wire seized from Purasaivakkam clothing store Vepery police arrested help CCTV


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->