கோவில் அறைக்குள் சுருண்டு கிடந்த 10 அடி மலைப்பாம்பு...! ஆலங்குளம் அருகே மயிலை விழுங்கிய மற்றொரு பிரம்மாண்டப் பாம்பு – தென்காசியில் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் மலைப்பாம்புகள் புகுந்த சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குற்றாலநாதர் கோவிலின் விலைமதிப்புமிக்க பொருட்கள் பாதுகாக்கப்படும் அறைக்குள் 10 அடி நீள மலைப்பாம்பு பதுங்கியிருந்த நிலையில், ஆலங்குளம் அருகே தோட்டத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று மயிலை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தின் முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக விளங்கும் குற்றாலநாதர் கோவிலில், வன உயிரினங்கள் அவ்வப்போது புகுந்துவிடுவது வழக்கமாக உள்ளது. மெயின் அருவிக்கரையில் அமைந்துள்ள இக்கோவிலுக்குள் மலைப்பாம்புகள், உடும்புகள் உள்ளிட்ட உயிரினங்கள் நுழைவதால் சில நேரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், நேற்று கோவிலில் நகைகள் உள்ளிட்ட விலைமதிப்புமிக்க பொருட்கள் பாதுகாக்கப்படும் பெட்டக அறையை ஊழியர்கள் திறந்தபோது, அங்கு சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சுருண்டு பதுங்கியிருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர்.இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த வனத்துறையினர், அறைக்குள் இருந்த மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்தனர். பின்னர், அதனைப் பாதுகாப்பாக வனப்பகுதிக்குக் கொண்டு சென்று விட்டனர்.பக்தர்கள் வந்து செல்லும் புகழ்பெற்ற கோவிலின் பெட்டக அறைக்குள்ளேயே மலைப்பாம்பு புகுந்திருந்த சம்பவம் ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, ஆலங்குளம் அருகே மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாறந்தை–கல்லத்திக்குளம் சாலையோரத்தில் அமைந்துள்ள தோட்டத்தில் சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்திருந்தது.அந்த மலைப்பாம்பு தோட்டத்தில் இருந்த மயிலைப் பிடித்து விழுங்கிக்கொண்டிருந்ததைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அப்பகுதி மக்களின் உதவியுடன் மலைப்பாம்பைப் பிடிக்க முயன்றனர். அப்போது, ஏற்கெனவே விழுங்கியிருந்த மயிலை மலைப்பாம்பு வெளியே கக்கியது.

இருப்பினும், அந்த மயில் உயிரிழந்தது.தொடர்ந்து, மலைப்பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்த தீயணைப்பு வீரர்கள், அதனை வனப்பகுதியில் விட்டனர்.குற்றாலநாதர் கோவிலின் பெட்டக அறையிலும் ஆலங்குளம் அருகே உள்ள தோட்டத்திலும் அடுத்தடுத்து மலைப்பாம்புகள் தென்பட்ட சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10 foot python found curled up inside temple room Another giant snake swallowed peacock near Alankulam sensation Tenkasi


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->