இன்று முதல் 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்.!!
10 and 11 marksheet distribute from today
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 16 ஆம் தேதி 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதையடுத்து கல்வித்துறை சார்பில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மே 19 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், மே 20ஆம் தேதி முதல் விடைத்தாள் கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

அதன் படி 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளிகளில் படித்த மாணவர்கள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மூலமாகவும், தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற அரசியல் இணையதளம் மூலம் பதிவெண், பிறந்த தேதி உள்ளீடு செய்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதேபோல், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், துணைத் தேர்வுக்கு தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களிலும் 22.05.2025 முதல் 06.06.2025 வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
English Summary
10 and 11 marksheet distribute from today