109 அடியாக உயரவிருக்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்...! - Seithipunal
Seithipunal


கோடை மழை, தமிழகத்தில் தற்போது பரவலாக பெய்து வருகிறது. இதே போல் கடந்த சில தினங்களாக, தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 108.82 அடியாக இருந்தது.

மேலும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6233 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதில் அணைக்கு வரும் தண்ணீரை விடகுறைந்த அளவிலேயே தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணை விரைவில் 109 அடியை எட்டும் தருவாயில் உள்ளது.

இதனால் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய தேவையான தண்ணீர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The water level of Mettur Dam is set to rise to 109 feet


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->