ஜம்ஷெட்ஜி நுஸர்வான்ஜி டாடா அவர்கள் நினைவு தினம்!
Jamshedji Nussarwanji Tatas memorial day
'இந்திய தொழில்துறையின் தந்தை'திரு.ஜம்ஷெட்ஜி நுஸர்வான்ஜி டாடா அவர்கள் நினைவு தினம்!.
இந்திய தொழில்துறையின் தந்தை ஜம்ஷெட்ஜி நுஸர்வான்ஜி டாடா 1839ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி குஜராத் மாநிலம், நவசாரி என்ற இடத்தில் பிறந்தார்.
தந்தையின் நிறுவனத்தில் 29வயது வரை வேலை செய்து வந்தார். 1868ஆம் ஆண்டு ரூ.21,000 முதலீட்டில் சொந்தமாக ஒரு வணிக நிறுவனத்தை தொடங்கினார்.
தொடர்ந்து பல ஆலைகளை நிறுவினார். இரும்பு மற்றும் எஃகு நிறுவனம், உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனம், தனித்துவம் வாய்ந்த ஹோட்டல் மற்றும் நீர் மின் நிலையம் ஆகியவற்றை நிறுவ வேண்டும் என்று தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டார்.

இவருடைய வாழ்நாள் கனவான ஹோட்டல் கனவு நிஜ வடிவம் பெற்றது. மும்பையில் 1903ஆம் ஆண்டு தாஜ் ஹோட்டல் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியமாக திகழும் டாடா குழுமத்துக்கு அஸ்திவாரமாக இருந்த இவர் தனது 65வது வயதில் 1904, மே 19 ஆம் தேதி அன்று மறைந்தார்.
English Summary
Jamshedji Nussarwanji Tatas memorial day