இந்து கடவுள் ராமர் உருவப்படத்தின் Flex Banner-ஐ செருப்பால் அடித்து, எரித்த சமூக விரோதிகள் 04 பேர் கைது..! - Seithipunal
Seithipunal


இந்து கடவுள் ராமர் உருவப்படத்தை செருப்பால் அடித்து, எரித்த நான்கு 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம், நவல்பட்டு கா.நி.சரகம், அயன்புத்தூர் கிராமத்தில் ஐந்தாம் தமிழ் சங்கம் (Regd.No.Book-4/360/2024) என்ற அமைப்பினரால் அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில் ஆசிவக திருமால் வழிகாட்டு விழா என்ற பெயரில் கடந்த 28-ஆம் தேதி தேதி காலை 06:00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா, மாலை 06:00 மணிக்கு மணிக்கு நிறைவு பெற்றது. 

குறித்த நிகழ்ச்சியில் சுமார் 100 நபர்கள் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அன்று இரவு மேற்படி சங்கத்தை சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து இந்து கடவுளான ராமர் உருவப்படம் பொறிக்கப்பட்ட Flex Banner-ஐ செருப்பால் அடித்து, அதற்கு தீவைத்து கொளுத்தி அதன் காணொளியை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். 

இதன் சம்பவம் இந்து மக்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, திருச்சி மாவட்டம் சமூக வலைத்தளம் மற்றும் ஊடகம் வழியாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை சம்மந்தமாக வரும் பதிவுகளை கண்காணித்து வரும் காவலர் சமூக வலைத்தளத்தை கண்காணித்துள்ளனர்.

அதன்படி, கடந்த 30.09.2025-ஆம் தேதி முகநூல் தளத்தில் "ஐந்தாம் தமிழர் சங்கம்" என்ற ID-யில் http://www.facebook.com/100075827423075/videos/2009680083184655/?app=fbi Link-60 "இந்து கடவுள் ராமரின் உருவப்படம் (நிற்பது போல) உள்ள Flex Banner-ஐ வைக்கோல் வைத்து கட்டி செருப்பை கொண்டு அடித்தும், இராவணனே போற்றி இராவணனே போற்றி என கூறி ஒருவர் நெருப்பை வைத்து கொளுத்துவது போல வீடியோ பகிரப்பட்டிருந்தது.

அத்துடன், அந்த வீடியோவில் அச்சங்கத்தை சேர்ந்த நபர்கள் சுற்றியிருந்து உருவப்படத்தை எரிப்பது போலவும், வீடியோ முடிவில் பத்துதல பத்துதல என பாடலுடன் ராவண இந்திரனே.. போற்றி.. போற்றி.. என்றும், ஐந்தாம் தமிழர் சங்கத்தில் இணைய விரும்புவோர் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளவும் என +91 9597145588, 8870353835 என்ற எண்களும் டைப் செய்து பதிவிட்டுள்ளனர்.

மேற்படி நபர்கள் இந்து கடவுள் இராமரை அவமதிக்கும் உள்நோக்கத்தோடு சமூக வலைத்தளமான முகநூலில் வீடியோவை பதிவிட்டு பொது மக்களிடையே கலவரத்தை தூண்டி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும்,மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் பரப்பியுள்ளனர்.

இந்த சமூக விரோத செயலில் ஈடுப்பட்ட நபர்கள் மீதும் மற்றும் அவர்களுக்கு ஆதரவளித்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி, மேற்படி சமூக வலைத்தள கண்காணிப்பு காவலர் திரு.கார்த்திக் என்பவர் புகார் கொடுத்துள்ளார். நேற்று சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண் 18/25 U/s 192, 196(1)(a), 197, 299, 302, 353(2) BNS வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேற்படி வழக்கின் குற்றவாளியான அடைக்கலராஜ், வயது 36, த. பெ. சங்கர், கதவு விலக்கம்: 7/6A, கவரப்பட்டி, இராஜாளிப்பட்டி அஞ்சல், விராலிமலை தாலுகா, புதுக்கோட்டை மாவட்டம் என்பவரை நேற்று (02.10.2025) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்று (03.10.2025) வழக்கின் மற்ற எதிரிகளான திலகேஸ்வரன் வயது 31, த.பெ ராஜலிங்கம், 2/125, தமிழர்தெரு, சித்தன்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டம் 2.நெப்போலியன் வயது 31, த.பெ காளியண்ணன், 6/83, அண்ணா நகர் காலனி, அத்தனூர், இராசிபுரம், நாமக்கல் மாவட்டம் மற்றும் 3.வசந்தகுமார் வயது 28, த.பெ சரவணன், 38/8, மேற்குதெரு, நெடுமானூர், சங்கராபுரம் தாலுக்கா, கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

வழக்கு புலன் விசாரணையில் இருந்து வரும் நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் எவரேனும் அறியப்பட்டால் அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறான சமூக வலைத்தளங்களில் பொது மக்களிடையே கலவரத்தை தூண்டி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் பதிவுகளை பதிவு செய்தாலோ, பகிர்ந்தாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

04 anti social elements arrested for burning Flex Banner of Hindu God Ramas image


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->