உயிரிழப்புக்கு வாய்ப்பு: இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க கூடாது; மத்திய அரசு அறிவுரை..!
The central government has advised not to give cough medicine to children under the age of two
மத்தியப் பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில், இருமல் மருந்து உட்கொண்டதால் 11 குழந்தைகள் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க கூடாது என மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் சிறுநீரக செயலிழப்பு காரணமாக 15 நாட்களுக்குள் 09 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ராஜஸ்தானில் உள்ள சுகாதார அதிகாரிகள், சில நாட்களுக்கு முன்பு சிகாரில் இதேபோன்று மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இறந்த 09 குழந்தைகளில், குறைந்தது 05 பேர் உயிரிழப்பிற்கு, கோல்ட்ரிப் இருமல் மருந்து எடுத்துக் கொண்டது தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து காஞ்சிபுரத்தில் உற்பத்தி செய்யப்படுவது விசாரணையில் தெரியவந்தது. குறித்த இருமல் மருந்து, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள, 'ஸ்ரீசன் பார்மா' என்ற கம்பெனியில் தயாரிக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

இதயனையடுத்து, இந்த மறுந்து தயாரிப்பு நிறுவனம் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநருக்கு, மத்திய பிரதேச மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டாளர் கடிதம் எழுதியுள்ளார்.
பின்னர், கோல்ட்ரிப் இருமல் மருந்தை தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய தடை விதித்து மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இருமல் மருந்து உட்கொண்டதால் 11 குழந்தைகள் இறந்ததாக கூறப்படும் நிலையில், இரண்டு வயதுக்குட்பட்ட இருமல் மருந்து கொடுக்க கூடாது என மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை சார்பில், அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கக் கூடாது.
பொதுவாக 05 வயது மற்றும் அதற்கு உட்பட்ட வயதினருக்கு, இருமல், சளி மருந்து பரிந்துரைக்கப்படுவதில்லை.
டாக்டர்களின் பரிந்துரைகளை பின்பற்றுவது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்.
எந்தவொரு வைரஸ் நோயாளிக்கும் தனிப்பட்ட முறையில் சிகிச்சை அளிக்கக்கூடாது. என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
The central government has advised not to give cough medicine to children under the age of two