ஆசிரியர் திட்டியதால் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 03 பேர் எடுத்த விபரீத முடிவால் பரபரப்பு..!
03 students of Kanchampatti Government Higher Secondary School attempt suicide
அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் 03 பேர் சாணி பவுடரை குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியை அடுத்த கஞ்சம்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் குறித்த மாணவிகள் 3 பேரும் இன்று மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதன்போது அப்பள்ளியில் உள்ள ஆசிரியை, பள்ளி மாணவிகளை திட்டியதாகவும், அதனால், மனம் உடைந்து பள்ளி மாணவிகள் 03 பேர் சாணி பவுடர் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.
பள்ளி ஆசிரியர்கள் உதவியோடு கஞ்சம்பட்டி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து மருத்துவமனைக்கு வந்த பள்ளி மாணவிகளின் பெற்றோர் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கோமங்கலம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
03 students of Kanchampatti Government Higher Secondary School attempt suicide