ஊத்துக்கோட்டை அருகே விவசாயியை எரித்து கொலை செய்த வழக்கு: 03 பேருக்கு ஆயுள் தண்டனை, 40 ரூ.ஆயிரம் அபாரதம்.! - Seithipunal
Seithipunal


ஊத்துக்கோட்டை அருகே விவசாயியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை வழக்கில் குற்றவாளி 03 பேருக்கு திருவள்ளூர் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து,  தீர்ப்பு அளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள கீழ்கரமனூர் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (45).  அதே கிராமத்தைச் சேர்ந்த தசரதன், குமார், குமரேசன் ஆகியோருக்கும் இடையே கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தகராறு  வந்துள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி ஆனந்தன், தன் வீட்டிலிருந்து விவசாய நிலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது தசரதன், குமார், குமரேசன் ஆகிய 03 பேரும், ஆனந்தனை வழிமறித்து அவரை கடத்தி சென்று, செங்கரை அருகே வைத்து தாக்கியுள்ளனர்.

அத்துடன், ஆனந்தனை அவரது மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்கில் இருந்த பெட்ரோலை பிடித்து ஊற்றி எரித்து கொன்றனர். அதன் பின்னர் சடலத்தைஆரணி ஆற்றில் புதைத்தனர். இந்தக் கொலை சம்பவம் நடந்து 03 நாட்களுக்குப் பிறகு, தசரன் உள்ளிட்ட 03 பேரும் கிராம நிர்வாக அலுவலர் முன்பு சரண் அடைந்த நிலையில், ஊத்துக்கோட்டை போலீஸார்  தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில்,திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்தக் கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. குறித்த வழக்கு விசாரணையில், தசரதன், குமார், குமரேசன் ஆகிய 03 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிபதி தஸ்னீம் இன்று தீர்ப்பு அளித்துள்ளார். தசரதன், குமார், குமரேசன் ஆகிய 03 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

03 people sentenced to life imprisonment in the case of burning and murdering a farmer near Uthukottai


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->