பிளாக்கில் டிக்கெட் விற்ற வாலிபர் கைது...! பெங்களூருல் நடந்த சிறப்பான சம்பவம்...! - Seithipunal
Seithipunal


பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் IPL கிரிக்கெட் போட்டியான 'பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி' மற்றும் 'சென்னை சூப்பர் கிங்ஸ்' அணிகளுக்கு இடையே நடந்தது.

இந்நிலையில் ரூ.1200 மதிப்புள்ள டிக்கெட்டுகளை சிலர் ரூ.10000 விலைக்கு விற்பனை செய்வதாக காவலர்களுக்கு  தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து காவலர்கள் அப்பகுதியில் கண்காணித்தனர். அப்போது கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்ற 'சரண்ராஜ்' என்பவரை மடக்கிப்பிடித்து, அவரிடமிருந்து 12 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

அதன் பின்னர் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்ற 'ஹர்ஷவர்தன் சங்க்லேச்சா, வினய் மற்றும்  வெங்கடசாய்' ஆகிய மேலும் 3 பேரையும் உடனடியாக கைது செய்தனர்.

மேலும், இவர்களிடமிருந்து மொத்தம் 32 டிக்கெட்டுகளை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.அதுமட்டுமின்றி, இவர்கள் இந்த டிக்கெட்டுகளை எப்படி வாங்கினார்கள் என்றும் காவலர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

young man who sold tickets block was arrested Bengaluru


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->