மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி! பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா பேட்டிங்.! - Seithipunal
Seithipunal


மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

நியூசிலாந்தில் நடைபெறும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மவுன்ட்மாங்கானு நகரில் நடைபெறுகிறது. 

அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த இளம் வீராங்கனைகளை உள்ளடக்கிய இந்திய அணி கடைசியாக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இருந்தது. உலக கோப்பை பயிற்சி ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகளை வீழ்த்தி இருந்தது. அந்த உற்சாகத்துடன் தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

நியூசிலாந்து நாட்டில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற கேப்டன் மிதாலி ராஜ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷெபாலி வெர்மா ஆகியோர் களமிறங்கினர். இந்திய அணி 5 ஓவர்களில் 1 விக்கட் இழப்பிற்கு 15 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஷெபாலி வர்மா 6 பந்துகளை சந்தித்து ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்திய அணியின் சீனியர் வீராங்கனைகளான கேப்டன் மிதாலி ராஜ் மற்றும் ஜுலான் கோஸ்வாமிக்கு இது ஆறாவது உலக கோப்பை போட்டித் தொடராகும்.

சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியாவுடன் மோதிய 10 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி தோல்வியையே சந்தித்து இருக்கிறது.

இதனால் இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணியின் கையே ஓங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2017-ஆம் ஆண்டு மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது, ஆனால் இங்கிலாந்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து நூலிழையில் கோப்பையை தவறவிட்டது. 

இந்திய ஆண்கள் அணியைப் போலவே, பெண்கள் உலகக் கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தோல்வியைச் சந்திக்காமலே இருந்து சாதனை படைத்து வருகிறது.

இம்முறை உலகக் கோப்பையில் இந்தியாவின் நம்பிக்கையைப் பற்றி, வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி கூறுகையில், தான் இரண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளதாகவும், ஆனால் கோப்பையை கைப்பற்ற முடியாதது வருத்தமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அணியில் ஈடுபட்டுள்ள வீரர்களின் திறமை மீது நம்பிக்கை இருப்பதாகவும், இம்முறையும் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டும் கோப்பையை கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World cup cricket India Batting against Pakistan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->