கோப்பை வென்ற களத்தில்… கோடிகள் கொட்டும் மேசையில் RCB ! -ரூ.16,000 கோடி டீல் ...? - Seithipunal
Seithipunal


ஐபிஎல் வரலாற்றில் ரசிகர்களின் இதயத்தை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, இப்போது கிரிக்கெட் களத்தைத் தாண்டி கோடிக்கணக்கான ரூபாய்களின் வணிகப் போட்டியில் கவனம் ஈர்த்து வருகிறது.முதலில் தொழிலதிபர் விஜய் மல்லையா உருவாக்கிய இந்த அணியை, பின்னர் இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட Diageo நிறுவனத்தின் இந்திய பிரிவு United Spirits கைப்பற்றியது.

2008-ல் ஐபிஎல் தொடங்கிய நாள் முதல் கோப்பையை ஏங்கிய RCB, 17 ஆண்டுகளின் நீண்ட காத்திருப்பை முடித்து இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது.ஆனால், அந்த வெற்றிக் கொண்டாட்டமே சோகமாக மாறியது. ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
RCB விற்பனைக்கு – ‘டீம்’ மட்டும் இல்லை, ‘பிராண்ட்’!
இந்நிலையில், சாம்பியன் பட்டத்தால் உச்சத்தை தொட்டுள்ள அணியை விற்பனை செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போதைய சந்தை மதிப்பு சுமார் $2 பில்லியன் (₹17,762 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் ஒப்பந்தத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேன்‌செஸ்டர் யுனைடெட் உரிமையாளர்கள் களத்தில்
இந்த சூடான ஏலப் போட்டியில், உலகப் புகழ்பெற்ற Manchester United கால்பந்து கிளப்பின் உரிமையாளரான கிளேசர் குடும்பம், RCBயை வாங்க ₹16,300 கோடி ($1.8 பில்லியன்) என்ற பிரமாண்ட ஆஃபரை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
IPL மற்றும் WPL இரண்டிலும் சாம்பியன் பட்டம் வென்றதால், RCB தற்போது ‘விளையாட்டு அணி’ மட்டுமல்ல… ‘பில்லியன் டாலர் பிராண்ட்’ என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இதனால், Diageo-விடம் முதலீட்டாளர்கள் வரிசையாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கிரிக்கெட்டில் வெற்றி… வணிகத்தில் பெரிய போட்டி
களத்தில் கோப்பை வென்ற RCB, இப்போது வணிக உலகிலும் கோடிகள் கொட்டும் வரலாற்று டீல் நோக்கி நகர்கிறது. அடுத்த உரிமையாளர் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

where RCB won trophy at table where billions being poured 16000 crore deal


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->