வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் மிரட்ட களமிறங்கும் இரண்டு வீரர்கள்.! ரசிகர்கள் உற்சாகம்.!! - Seithipunal
Seithipunal


இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க உள்ளது இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முதல் இரண்டு போட்டிகளும் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற உள்ளது. போட்டி ஆகஸ்ட் 3 மற்றும் 4ம் தேதிகளில் இந்த இரண்டு டி20  போட்டிகளும் அடுத்தடுத்து நடைபெறுகிறது. மீதமுள்ள கடைசி மற்றும் ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் வெஸ்ட் இண்டீசில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 14 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சில வருடங்களாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடாமல் இருந்த வீரரான பொல்லார்டு  மற்றும் சுனில் நரேன் ஆகியோர் அணியில் தேர்வாகியுள்ளனர். இதுகுறித்து  தேர்வுக்குழு தலைவர் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரை கருத்திலோ கொண்டு அணியில் சேர்த்து உள்ளதாக கூறினார். 

முதல் இரண்டு போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்

பிராத்வெயிட்(கேப்டன்), ஜான் கேம்பல், எவின் லெவிஸ், ஹெட்மயர், பூரான், பொல்லார்ட், பாவெல், கீமோ பால், சுனில் நரேன், காட்ரெல், தாமஸ், பிராம்பிள், ரசல், காரி பியர்ஸ்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

west indies series again back 2 players


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal