"தோனி இல்லாமல் களமிறங்கும் காலம் வரலாம்".. சி.எஸ்.கே வீரர்களுக்கு சேவாக் அட்வைஸ்..!! - Seithipunal
Seithipunal


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தற்போது வரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 3 Portugal வெற்றி பெற்று 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த 3 வெற்றிகளையும் சிஎஸ்கே அணி போராடியே பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி திரில் வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்த வரை பேட்டிங் ஓரளவுக்கு கை கொடுத்தாலும் பௌலிங் அவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக அமையவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலர்களான தீபக் சஹார், முகேஷ் சௌத்ரி, மங்களா, பென் ஸ்ட்ரோக்ஸ் உள்ளிட்டோர் காயம் ஏற்பட்ட காரணத்தால் அணியில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அனைத்து போட்டிகளிலும் வெற்றியை தீர்மானிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பௌலிங் அமையவில்லை. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பௌலிங் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்

இது குறித்து பேசிய அவர் "எதிர் அணியினருக்கு அதிக எக்ஸ்ட்ராஸ் வழங்குவதால் சிஎஸ்கே அணியின் வெற்றி பாதிக்கப்படுவதோடு, தோனி போட்டியிலிருந்து நீக்கப்படும் வாய்ப்பும் உள்ளது என்பதை வீரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தோனி இது குறித்து ஏற்கனவே அணியிருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சிஎஸ்கே அணி வீரர்கள் எக்ஸ்ட்ராஸ் வழங்குவதை குறைக்கவில்லை என்றால், ஒருநாள் கேப்டன் தோனி இல்லாமல் களமிறங்கும் காலம் வரலாம். பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டால் விதிமுறைகள் மீறப்பட்டதாக தோனிக்கு அபராதம் விதிக்கப்படும்" என சிஎஸ்கே அணி வீரர்களுக்கு வீரேந்திர சேவாக் முக்கியமான அறிவுரையை வழங்கியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் அணிகளின் சவால்களை எதிர்கொள்ள நிச்சயம் சிஎஸ்கே அணியின் பௌலிங் பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virender Sehwag Advice for CSK Team Bowlers


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->