விராட் கோலி 50 ஆவது சதம் எப்போது அடிப்பார் தெரியுமா? வெளியான சுவாரசியமான தகவல்கள்!  - Seithipunal
Seithipunal


கடந்த பத்து வருடத்திற்கு முன் கிரிக்கெட் உலகில் கொடிகட்டி பறந்தவர், அவருடைய சாதனைகள் முறியடிக்கப்பட முடியாது என்று மலைக்க வைத்தவர், இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். அவருடைய பேட்டிங் சாதனைகள் ஆனது, அவர் சமகாலத்து வீரர்கள் மலைக்கும் வகையில் வைத்திருந்தார். சதமாக இருக்கட்டும், அரைசதங்கள் ஆக இருக்கட்டும், மொத்த ரன்கள் ஆக இருக்கட்டும் அனைத்திலுமே அவர் எட்ட முடியாத உயரத்தில் இருந்தார். அவர் ஓய்வு பெறும் வரை அவருடைய சாதனைகள் முறியடிக்கபடுவது கடினம், இயலாத ஒன்று என்றே அனைவராலும் கூறப்பட்டது. 

ஆனால் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி காலகட்டத்தில் அவருடன் அறிமுகமாகி விளையாடிய இந்திய வீரரான விராட் கோலி அவருடைய சாதனைகளை தகர்ப்பார் என தற்போது நம்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே சில சாதனைகளையும் அவர் தகர்த்துக் கொண்டே தான் வந்து கொண்டிருக்கிறார். இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பொழுது அவர் அடித்த சதம் ஆனது ஒரு நாள் போட்டிகளில் அவருடைய 42 வது சதம் ஆக பதிவானது.

இதுவரை ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் தான். அவர் 49 சதங்களை அடித்துள்ளார். அவர் 463  ஒருநாள் போட்டிகளில் 452  இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள அவர் இந்த சாதனையை  செய்துள்ளார். தற்பொழுது 229  இன்னிங்ஸ்களில் 42 சதங்களை அடித்துள்ளார் கோலி. இதே வேகத்தில் விராட் கோலி சதம் அடித்து கொண்டு இருப்பார் எனில் இன்னும் 43  இன்னிங்ஸ்களில் 50-வது சதத்தை அடிப்பார் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 272 இன்னிங்ஸ்களிலேயே சச்சின் சாதனையை தகர்ப்பார் என கணிக்கப்பட்டுள்ளது 

மேலும் சச்சின் ஆடிய 452 இன்னிங்சை விளையாடும் பொழுது விராட் கோஹ்லி ஒருநாள் போட்டிகளில் 83 சதங்களை அடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. அதுவரை அவருக்கு சரியான உடல் தகுதியும், பார்மும் இருந்தால் 83 என்ன 100  சதங்கள் கூட அவர் அடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் கடந்த 2017 முதல் அவர் அடித்த சதங்கள் மட்டும் 15 க்கும் மேல் ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virat kohli when hit his 50th ODI century


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal