ரசிகர்களை பதைபதைப்பிற்கு உள்ளாக்கிய நேற்றைய போட்டி.. கோலியின் பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நாலாவது டி20 கிரிக்கெட் போட்டியானது நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 165 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. 

இருப்பினும் நியூசிலாந்து அணி 165 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், இந்த போட்டி டையில் முடிந்தது. இதனையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டு, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 13 ரன்கள் எடுத்து, 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. 

அடுத்தடுத்து இரண்டு போட்டியில் நடைபெற்ற சூப்பர் ஓவரில் இந்தியா தனது வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், நேற்றைய போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களை விராட்கோலி சந்தித்தார். இந்த சந்திப்பில், நான் பல புதிய விஷயங்களை நேற்றைய போட்டியிலும் இன்றைய போட்டியிலும் கற்றுள்ளேன். 

இதன்மூலமாக எதிரணியினர் சிறப்பாக விளையாடிய நேரத்திலும், இறுதிக்கட்டம் வரை பொறுமையாக இருந்து போட்டி தங்களது சாதகத்திற்கு அமையும் வரை  காத்திருந்து திரும்ப முயற்சிக்க வேண்டும் என்பது தான். 

இதை விட அற்புதமான போட்டிகளை பார்க்க முடியாது. இதற்கு முன்னதாக நாங்களும் சூப்பர் ஓவரை விளையாடியது கிடையாது. தற்போது இரண்டு போட்டிகளிலும், இரண்டு சூப்பர் ஓவரில் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளனர். இது அணியின் தன்மையை குறிக்கிறது. 

துவக்கத்தில் கேஎல் ராகுல் உடன் சஞ்சு சாம்சன் களமிறக்கப்படுவதாக இருந்த நிலையில், ராகுல் என்னிடம் நீங்கள் தான் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும், உங்களுக்கு அதிக அனுபவம் உள்ளது என்றார். 

அதனால்தான் நான் தொடக்க வீரராக களம் இறங்கினேன். கே.எல்.ராகுல் அடித்த முதல் இரண்டு பந்துகளும் மிக முக்கியமானதாக அமைந்தது. ஆடுகளத்தை நாங்கள் சரியாக கண்டிக்கவில்லை.. இருந்தாலும் இறுதியில் வெற்றியை அடைந்துவிட்டோம் என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

virat kohli speech about super over victory


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->