கேப்டன் பதவியை ராஜினாமா செய்கிறார் விராட் கோலி.? புதிய கேப்டன் இவரா.? - Seithipunal
Seithipunal


2014 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகியதை அடுத்து, ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளுக்கும் இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக உள்ளார். கேப்டன் விராட் கோலி மூன்று விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். 

குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில்  இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிகளை குவித்து வருகிறார். எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் எந்த போட்டியிலும் சதம் அடிக்கவில்லை. அதுமட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளில் ரன் எடுக்க சிரமப்படுகிறார். கோலி தனது  பேட்டிங்கில் தடுமாறுவது தெளிவாக தெரிகிறது. 

மேலும், கோலி தலைமையிலான இந்திய அணி பல வெற்றிகளை பெற்றாலும், ஐசிசி தொடரை ஒரு முறை கூட வெல்லவில்லை என்பது குறைவாகவே உள்ளது. இதனிடையே, டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கு ரோகித் சர்மாவிடம் கேப்டன் பதவி அளிக்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் கூறிவருகின்றனர். மேலும், கேப்டன் பதவியை ரோஹித் சர்மாவிடம் கொடுத்தால் கோலிக்கு பணிச்சுமை குறையும் மற்றும் பேட்டிங்கில் மேலும் கவனம் செலுத்த முடியும் எனவும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட உள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் டெஸ்ட் போட்டிகளுக்கு கோலி கேப்டனாக தொடர்வார் என்றும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை கேப்டன் கோலி விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virat kohli may be resigns captain post


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal