நோய் எதிர்ப்பு சக்தி முதல் இளமையான தோற்றம் வரை...! 'பழங்களின் ராணி' மங்குஸ்தான் பழத்தின் முழு கதை இதோ...!
From immunity youthful appearance Here full story queen fruits mangosteen
மங்குஸ்தான் பழம், “பழங்களின் ராணி” என்ற பெருமைக்குரிய பழமாகும். வெளியில் அழகான ஊதா நிறத்துடன், உள்ளே நெளிந்த வெள்ளை பஞ்சு போன்ற சதைப்பகுதியும் காணப்படுகிறது. இனிப்பு மற்றும் மென்மையான புளிப்பு கலந்த தனித்துவமான சுவை இதன் முக்கிய சிறப்பாகும்.
ஒரு பழத்தில் ஆறு வெண்மை நிற பாகங்கள் இருக்கும், ஒவ்வொன்றும் மென்மையான சுவையும், சத்தும் நிறைந்தவை.மங்குஸ்தான் பழம் வெப்பமண்டல பருவமுள்ள பகுதிகளில் செழித்து வளரும் மரங்களில் விளங்குகிறது. அதிக ஈரப்பதமும், சூடான வானிலையும் இதன் வளர்ச்சிக்கு ஏற்றவை.

தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் பெரிதும் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் ஈரப்பதமிக்க பகுதிகளில், குறிப்பாக குமரி மாவட்டத்தின் பேச்சிப்பாறை, ஆலஞ்சோலை, களியல், நெட்டா, மாறமலை, வேளிமலை பகுதிகளில் அதிகளவு மங்குஸ்தான் மரங்கள் காணப்படுகின்றன. இந்த பழங்கள் மே மற்றும் ஜூன் மாதங்களில் அதிகமாக விளைகின்றன.
ஊட்டச்சத்து:
மங்குஸ்தான் பழம் நார்ச்சத்து, வைட்டமின் பி1, பி2, பி9, வைட்டமின் சி, ஆண்டி ஆக்சிடென்ட்கள், பொட்டாசியம் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது.
நன்மைகள்:
ஜாந்தோன்கள் மற்றும் வைட்டமின் சி உடலை நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும். ஜாந்தோன்கள் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட்கள்.
பொட்டாசியம் மற்றும் தாதுக்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலை தடுக்கிறது.
ஆன்டி ஆக்சிடென்ட்கள் சரும செல்களை பாதுகாக்கி, இளமையான தோற்றத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகின்றன.
பி-வைட்டமின்கள் உடல் ஆற்றல் மற்றும் செல்களின் வளர்ச்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றன.
மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு தசைகள் வலுவாகவும், எலும்புகள் பலமாகவும், இதய ஆரோக்கியமாகவும் உதவுகின்றன.
மொத்தமாக, மங்குஸ்தான் பழம் சுவை, சத்து மற்றும் மருத்துவ நன்மைகள் அனைத்தையும் ஒரே பழத்தில் வழங்கும் இயற்கை அருமை கொடையாக விளங்குகிறது.
English Summary
From immunity youthful appearance Here full story queen fruits mangosteen