பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்...! - முதலமைச்சர் ஸ்டாலின் மாணவர்களுக்கு வாழ்த்து...! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டத்தை பின்பற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை முதல் தொடங்க உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 7,545 பள்ளிகளில் இருந்து 7,99,692 மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

இதையொட்டி, நாளை தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நாளை பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களும், எதிர்வரும் 11-ஆம் தேதி முதல் தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களும் மனச்சுமை இல்லாமல் தேர்வை எதிர்கொள்ள வாழ்த்துக்கள்! .

பதற்றமில்லாமல் தேர்வை எழுதுங்கள்; உங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

உறுதியுடன் படிப்பவர்களுக்கு ஊக்கமளித்து உயர்த்தும் வகையில் திராவிட மாடல் அரசு எப்போதும் உங்களுடன் உள்ளது. #AllTheBest” என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Plus 2 public examination begins tomorrow Chief Minister Stalin congratulates students


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->