இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் கடைசி ஒருநாள் போட்டி.. ஒயிட் வாஷ் செய்யுமா இந்தியா.? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் அகமதாபாத்  நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. 

இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் நரேந்திர மோடி மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்தது. முதல் ஒருநாள் போட்டியில் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்தது. இரண்டாவது போட்டியில் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்தது. 2வது ஒருநாள் போட்டியில் 19 விக்கெட்டுகளில் 13 விக்கெட்டுகள்  வேகப்பந்து வீச்சாளர்கள் எடுத்தனர். 

இந்நிலையில், இன்று நடைபெறும் இறுதி ஒருநாள் போட்டியில் ஆடுகளம் பேட்டிங் மற்றும் பௌலிங்க்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால், வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் முறையில் முழுமையாக கைப்பற்றும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

today ind vs wi 3nd odi match


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->