டெத் ஓவரில் புதிய சாதனை படைத்த இந்திய அணி.!! - Seithipunal
Seithipunal


வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியது. அதில், 3 ஒருநாள் போட்டிகளில் 3 - 0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்திய அணி ஒயிட் வாஷ் செய்தது. 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை எடுத்தது. இதில், சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 65 ரன்களை எடுத்தார். வெங்கடேஷ் அய்யர் 35 ரன், இஷான் கிஷன் 34 ரன்களை எடுத்தார்.

இதன்பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 167 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் 17 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.மேலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்தது.  

இந்நிலையில், டெத் ஓவர் என அழைக்கப்படும் கடைசி 5 ஓவர்களில் இந்திய அணி 86 ரன்களை எடுத்தது. டி20 போட்டிகளில் கடைசி 5 ஓவர்களில் இந்திய அணி எடுத்த அதிக ரன் என்ற சாதனையை படைத்தது. ஏற்கனவே கடந்த 2007ஆம் ஆண்டு டர்பனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி கடைசி 5 ஓவரில் 80 ரன்கள் எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

team india highest runs in death over


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->