#WPL : மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சரான டாடா நிறுவனம்! - Seithipunal
Seithipunal


முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை சமீபத்தில் ஐபிஎல் கமிட்டி வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 4ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த மகளிர் ஐபிஎல் சீசனில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், அகமதாபாத், லக்னோ அணி ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.

அதன்படி, 5 அணிகளும் 4669.99 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன. இதனையடுத்து மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வீராங்கனைகளுக்கான ஏலம் பிப்ரவரி 13ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கும் டைட்டில் ஸ்பான்சரை டாடா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'மகளிர் பிரீமியர் லீக்கின்  டைட்டில் ஸ்பான்சராக டாடா குழுமத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களின் ஆதரவுடன், மகளிர் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது ' என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TATA get women's Premier league title point sponsor


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->