சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தமிழக ஆல்ரவுண்டர் ஆர்.எஸ்.அம்ப்ரிஷ்..!
Tamil Nadu all rounder RS Ambrish has been signed by Sunrisers Hyderabad
உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ஐபிஎல் போட்டியின் 19வது தொடர் நாட்டின் முக்கிய மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி, இன்றைய தினம், 05 முறை சாம்பியன் வென்றுள்ள 02 அணிகள் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் 09 வது இடத்தில் மும்பை மற்றும் 07 வது இடத்தில் உள்ள சென்னை அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பல பரீட்சை நடத்தவுள்ளது.
இந்நிலையில், இந்த 2026 ஆம் ஆண்டு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளரான ஷிவம் மாவி இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இதையடுத்து அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டரான ஆர்.எஸ்.அம்ப்ரிஷ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் யு-19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் அம்ப்ரிஷ் இடம் பெற்று இருந்தார். அந்தத் தொடரில் அவர், 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வலதுகை மித வேகப்பந்து வீச்சாளரும், இடது கை பேட்ஸ் மேனுமான அம்ப்ரிஷை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.30 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
English Summary
Tamil Nadu all rounder RS Ambrish has been signed by Sunrisers Hyderabad