அதிமுக 200 இடங்களில் அமோக வெற்றிப்பெறும்; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு நம்பிக்கை..! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் நெல்​லுக்​காரத் தெரு​வில் சித்​ரகுப்த சுவாமி கோயி​ல் அமைந்துள்ளது. நேற்று சித்ராபௌர்ணமியை முன்னிட்டு, கோவிலில் திருக்​கல்​யாண உற்​சவம் நடை​பெற்​றது.

இந்த விழா​வில் முன்​னாள் அமைச்​சர் கடம்​பூர் ராஜு பங்​கேற்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கோயில் நிர்​வாகம் சார்​பில் அவருக்கு சிறப்​பான வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

நிகழ்விற்கு பின்னர் செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர் கூறியதாவது; கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடந்த தேர்​தலிலேயே மக்​கள் தங்​களது தீர்ப்பை வழங்​கி​விட்​டனர். அந்​தத் தீர்ப்பு அதி​முக​வுக்கு சாதக​மாக இருக்​கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்​தத் தேர்​தலில் 200-க்​கும் மேற்​பட்ட தொகு​தி​களைக் கைப்​பற்றி அதிமுக மீண்​டும் ஆட்சி அமைக்​கும் என்றும், பேரறிஞர் அண்​ணாவுக்​குப் பிறகு, கட்​சித் தொடங்​கித் தொடர்ந்து வெற்றி பெற்​றவர் புரட்​சித் தலை​வர் எம்​ஜிஆர் மட்​டுமே என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மேலும், அதி​முக​வின் வாக்​குச் சதவீதத்தை யாராலும் கைப்பற்ற முடி​யாது என்ற நிலை​யோடு தேர்​தல் முடிவு​கள் வரும் என்று முன்​னாள் அமைச்​சர் கடம்​பூர் ராஜு நம்பிக்கையாக பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former Minister Kadambur Raju expresses confidence that the AIADMK will achieve a resounding victory in 200 seats


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




சினிமா

Seithipunal
--> -->