தமிழ்நாடே எதிர்ப்பார்க்காத தேர்தல் முடிவு; இன்றைக்கு டம்மி முதல்வர் ஆட்சியில் ஒரு சர்க்கஸ் கூட்டம்; தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ள உதயநிதி..! - Seithipunal
Seithipunal


வடக்கு மண்டலம் திமுக வழக்கறிஞர் அணி கலந்துரையாடல் கூட்டம், இன்று  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக இளைஞர் அணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்ற்றினர். 

அப்போது அங்கு பேசிய அவர் கூறியதாவது; இந்த தேர்தலுக்கு நீங்கள் அத்தனை பேரும் வார் ருமில் பணியாற்றியிருக்கிறீர்கள். தேர்தல் பணியை ஆற்றியிருக்கின்றீர்கள். இன்றைக்கு நாம் எதிர்ப்பார்க்காத ஒரு தேர்தல் முடிவு வந்து இருக்கிறது. நாம் மட்டுமல்ல, தமிழ்நாடே எதிர்ப்பார்க்காத தேர்தல் முடிவு வந்துள்ளது. தமிழ்நாடு மட்டுமல்ல, இன்றைக்கு ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற சர்க்கஸ் கூட்டமே எதிர்ப்பார்க்காத ஒரு தேர்தல் முடிவை தமிழக மக்கள் கொடுத்து இருக்கிறார்கள் என்று தவெக அரசை சர்க்கஸ் கூட்டம் என கிண்டலடித்து பேசியுள்ளார்.

அத்துடன், அதை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்றும், இன்றைக்கு இந்த சர்க்கஸ் கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு, மற்ற அணிகளின் தேவையை விட வழக்கறிஞர்களின் பணி மிக, மிக அவசியமாக, முக்கியமானதாக கருதப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, கடந்த 100 நாட்களில் யார் ரொம்ப பிஸியாக இருக்கிறார்கள் என்றால் வழக்கறிஞர்கள் தான் என்றும், ஏன் பிஸியாக இருக்கிறீங்கள் என்று உங்கள் அத்தனை பேருக்கும் தெரியும் என்று குறிப்பிட்டதோடு,'' நின்றால் கைது, நடந்தால் கைது, பேசினால் கைது. சோஷியல் மீடியாவில் ஒரு கருத்து போட்டால் கைது''என்று, ஒரு மோசமான பாசிச அரசாக இன்றைக்கு இந்த அரசாங்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.

மேலும், இந்த அரசுக்கு இன் செக்கியூரிட்டி ரொம்ப அதிகம் என்றும், இன்றைக்கு தூங்கி எழுந்தால் யாரை கைது பண்ணலாம் என்று செட்டியூல் போட்டு, இந்த அரசு கைது நடவடிக்கைகளை எடுத்து வருகிறதாகவும், இரண்டு வாரத்திற்கு முன்னர், 02-ஆம் தேதி என்ன நடந்தது என்று மறந்து இருக்க மாட்டீர்கள் என்று குறிப்பிட்டு பேசினார்.

அதாவது, ''இந்த அரசு என்னையும் கைது செய்ய முயற்சித்தார்கள். எதற்காக கைது..? டெல்டாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக தலைவர் சொன்னதன் பெயரில் தஞ்சாவூரில் ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினேன். கிட்டத்தட்ட 22 நிமிடம் பேசியிருக்கிறேன். நான் நினைத்தேன் நான் பேசினதை வைத்து தான் கைது பண்ண வந்து இருக்கிறார்கள் என்று.. அன்று காலை 08 மணிக்கு காவல்துறையினர் எனது வீட்டிற்கு வந்தார்கள். நான் பேப்பர் படித்து கொண்டு இருந்தேன். என்னுடைய உதவியாளர் வந்து சொன்னார். தஞ்சாவூரில் இருந்து போலீசார் வந்து இருக்கிறார்கள். அப்போதே நான் நினைத்து கொண்டேன். என்னை கைது பண்ண வந்து இருக்கிறார்கள் என்று.

நான் உடனே யோசித்து பார்த்தேன். என்ன பேசினேன் என்று. டம்மி முதல்வர் என்று பேசினேன். அதை ஒத்துக்கொண்டார்கள். அதுக்கு என்ன ரியாக்சனும் இல்லை. கேடுகேட்ட அரசு அமைந்திருக்கிறது. ஒரு வெட்கம் கெட்ட அரசு அமைந்திருக்கிறது என்று எல்லாம் சொன்னேன். இதற்கு எல்லாம் எந்த ரியக்சனும் இல்லை. இதற்கு தான் கைது பண்ண வந்து இருக்கிறார்கள் என்று நினைத்து கொண்டேன். என்ன அப்படி பேசி விட்டேன். காவேரியில்  தண்ணீர் வர வேண்டும் என்று பேசினேன். இது எனக்கு தோணவே இல்லை. நான் வெளியே போய், காவல்துறை அதிகாரிகள் நின்று கொண்டு இருந்தார்கள்.

வீட்டுக்கு உள்ளேயே வந்து விட்டார்கள். எதற்கு வந்து இருக்கீங்க என்று கேட்டேன். நீ்ங்க தஞ்சாவூரில் நேற்று பேசியிருக்கிறீங்க. அது தொடர்பாக கைது செய்ய வந்து இருக்கிறோம் என்றனர். வெயிட் பண்ணுங்க. இப்போது தான் எழுந்து இருக்கிறேன். என்னுடைய வழக்கறிஞரிடம் சொல்லி எழுப்ப வேண்டும். தலைவரிடம் சொல்ல வேண்டும். வழக்கறிஞர்கள் வந்தவுடன் உங்களை சந்திக்கிறேன் என்றேன். கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்க என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டேன்.

நான் இதற்கு எல்லாம் பயப்பட போறது இல்லை. கைது பண்ணட்டும் என்று சொல்லிவிட்டேன். மின்னல் வேகத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தை ஆரம்பித்திறீர்கள். கைதாகி வண்டியில் ஏறும் போது பத்திரிகையாளர்கள் எல்லாம் கேட்டார்கள். கைதை எப்படி பார்கிறீர்கள் என்று. நான் சொன்னேன். இது மிகப்பெரிய காமெடி. மிகப்பெரிய நகைச்சுவை இந்த அரசு அரங்கேற்றியிருக்கிறது என்று சொன்னேன். சட்டமன்றத்திற்கு வருவதை தடுப்பதற்காக இதை செய்கிறார்களா? என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். நான் சொன்னேன். அந்த அளவுக்கு இவர்களுக்கு மூளை கிடையாது.

நாங்க கேள்வி கேட்டாலும் அப்படியே பதில் சொல்லி கிழித்து விட்டார்கள் என்று சொன்னேன். யார் அமைச்சர் என்று யாருக்கும் தெரியாது. யார் சட்டமன்ற உறுப்பினர் இப்போ வரைக்கும் யாருக்கும் தெரியாது. வேற துறைக்கு பதில் கேட்டால், வேற துறை அமைச்சர் பதில் சொல்கிறார். படத்தில் வருகிற மாதிரி நாம் ஒரு கேள்வி கேட்டால் நாமளே ஆச்சரியப்படும் அளவுக்க ஒரு பதில் சொல்வான் பாருங்கள் என்பது மாதிரி பதில் சொல்வார்கள். இப்போது உட்கார்ந்து இருக்காறே ஒரு டம்மி முதல்வர் அவருக்கும் யார் அமைச்சர் என்று தெரியாது. யார் சட்டமன்ற உறுப்பினர் என்று தெரியாது. அப்படி தான் சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கிறது'' என்று முதல்வர் தவெக அரசை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Udhayanidhi has strongly criticized the Tvk government calling it a circus under the rule of a dummy chief minister


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?


செய்திகள்



Seithipunal
--> -->