ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட தவெக அலுவலகத்திற்கு தீ வைப்பு; வெளியான சிசிடிவி காட்சிகள்; இருவருக்கு போலீசார் வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பெட்டவாய்த்தலை பகுதியில், செயல்பட்டு வந்த தவெக தேர்தல் அலுவலகம் ஒன்று கடந்த  ஏப்ரல் 30-ஆம் தேதி நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த தேர்தல் அலுவலகத்தில் உள்ள பேனர்களை கத்தியால் கிழித்தும் அட்டூழியம் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ஸ்ரீரங்கம் தவெக வேட்பாளர் ரமேஷ்,  குற்றம்சாட்டிய நிலையில், அந்த பகுதி தவெக ஒன்றிய செயலாளர் தலைமையில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்ததனர். இதனையடுத்து, 02 பேர் அலுவலகத்தை தீயிட்டு எரித்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சிசிடிவி காட்சிகளில், தமிழக வெற்றி கழகம் அலுவலகம் அருகில் பனியன் அணிந்த இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து வாகனத்தை நிறுத்திவிட்டு, சிறிது நேரம் கழித்து மீண்டும் வாகனத்தை எடுத்துச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்தது யார் என்பது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தின் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கான தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. நாளை மறுதினம் (மே 04) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என 04 முனைப்போட்டி நிலவி வருகிறது. அதன்படி, கடந்த, ஏப்ரல் 29-ஆம் தேதி வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை, திமுக தலைமையிலான கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் எனக் கூறி வருகின்றன.

அத்துடன், அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என ஒரு சில கருத்துக் கணிப்புகளும், தவெக ஆட்சியை கைப்பற்றும் என ஒரு சில கருத்துக் கணிப்புகளும் கூறியுள்ளன. முதன்முறையாக தேர்தலை சந்தித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே தவெக மற்றும் திமுக இடையே தான் போட்டி எனக் கூறிவந்த வேளையில், வாக்குப்பதிவுக்கு பிறகு, அது பெரும்பாலான இடங்களில் எதிரொலித்திருப்பதாக பார்க்கப்படுகிறது.

வாக்குப்பதிவு நாளின் போது கூட, பெரும்பாலான இடங்களில் தவெக மற்றும் திமுகவினர் மோதல் ஏற்பட்ட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருது கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CCTV footage released regarding the arson attack on the TVK office within the Srirangam constituency


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




சினிமா

Seithipunal
--> -->