சவரன் எவ்வளவு...? கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை...! - இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?
How much sovereign Gold prices have risen sharply Do you know what current price situation
தங்கத்தின் விலை மீண்டும் ஏற்றத் தாழ்வுகளின் அதிர்வில் ஆடிக்கொண்டே உள்ளது. கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி விலை சரிவை சந்தித்த நிலையில், அதன் பின்னர் உயர்வும், மறுபடியும் சரிவும் என நிலைமாறும் போக்கில் பயணிக்கிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.14,100-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,800-க்கும் விற்பனையாகியது.

அதனைத் தொடர்ந்து நேற்று காலை நிலவரப்படி கிராமுக்கு ரூ.50, சவரனுக்கு ரூ.400 என விலை தளர்ச்சி கண்டது.ஆனால் அதில் நிற்காமல், நேற்று மாலை மேலும் விலை வீழ்ச்சி தீவிரமடைந்து, கிராமுக்கு ரூ.130, சவரனுக்கு ரூ.1,040 என குறைந்தது. இதனால் ஒரே நாளில் இரு கட்டமாக சரிவு ஏற்பட்டது.
மொத்தத்தில் கிராமுக்கு ரூ.180, சவரனுக்கு ரூ.1,440 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,920-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலையும் இதே பாதையைத் தொடர்ந்து, கிராமுக்கு ரூ.5 மற்றும் கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனையாகியது.
இந்நிலையில், இன்று சென்னையில் தங்க விலை மீண்டும் உயர்வை நோக்கி நகர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.80, சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,000-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்வு கண்டுள்ளது. கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.270-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களின் தங்க விலை நிலவரம் பின்வருமாறு:
02.05.2026- ஒரு சவரன் ரூ.1,12,000 (இன்று)
01.05.2026 - ஒரு சவரன் ரூ.1,11,360
30.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,800
English Summary
How much sovereign Gold prices have risen sharply Do you know what current price situation