தோனியின் IPL ஆட்டம் குறித்து சுரேஷ் ரெய்னா தெரிவித்தது என்ன? 
                                    
                                    
                                   Suresh Raina say about Dhoni IPL performance
 
                                 
                               
                                
                                      
                                            IPL 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில்,நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியன் ஆன 'சென்னை சூப்பர் கிங்ஸ்' அணி 9 போட்டிகளில் விளையாடி இம்முறை வெறும் 2 வெற்றிகள் மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலுள்ளது.

 இதனால்  சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பில்லை. முன்னதாக சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட் கையில் ஒப்படைத்த தோனி, நடப்பு சீசனில் இருந்து காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் விலகியதால் கேப்டன் பொறுப்பு மீண்டும் பெற்றார்.
ஆனால் அவரது தலைமையிலும் சென்னை அணி வெற்றி பெற முடியாமல் போராடி வருகிறது.இதைத் தொடர்ந்து எதிர்கால அணியை உருவாக்கும் நோக்கில் 'சென்னை நிர்வாகம்' களமிறங்கியுள்ளது.
இதனால் தற்போது 43 வயதான தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. கடந்த சீசனோடு ஓய்வு பெறுவார் என்று அனைவரும் நினைத்த வேளையில் அவர் இந்த சீசனிலும் விளையாடி வருகிறார்.
நடப்பு சீனில் ஒழுங்காக விளையாடமுடியாததால் அவர் அடுத்த சீசனில் விளையாடுவது கடினம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தியா மற்றும் சென்னை அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னாவிடம் ரசிகர் ஒருவர்,' தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா?' என்று எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த ரெய்னா, "தோனி இன்னும் ஒரு ஐ.பி.எல். சீசனில் விளையாடுவார்" என்று தெரிவித்தார்.
                                     
                                 
                   
                       English Summary
                       Suresh Raina say about Dhoni IPL performance