இரட்டை இலை யாருக்கு...? தேர்தல் ஆணையத்துக்கு அதிரடி கடிதம் எழுதிய செங்கோட்டையன்...! 
                                    
                                    
                                   Sengottaiyan wrote dramatic letter Election Commission
 
                                 
                               
                                
                                      
                                            ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. செங்கோட்டையனை, கட்சி ஒழுங்கு விதிகளை மீறியதாக குற்றம் சாட்டி, சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கியிருந்தார்.
“கட்சியின் நெறிமுறைகளுக்கு முரணான செயல்களில் ஈடுபட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என எடப்பாடி தெரிவித்தார்.ஆனால், இதைத் தொடர்ந்து கட்சிக்குள் புதிய அரசியல் அதிர்வலை எழுந்துள்ளது.

நீக்கப்பட்ட செங்கோட்டையன், இப்போது இரட்டை இலை சின்னம் தொடர்பாக நேரடியாக தேர்தல் ஆணையத்திடம் மனு எழுதி, தன்னுடைய பக்கம் உண்மையை வெளிப்படுத்த முயன்றுள்ளார்.அந்த கடிதத்தில் அவர் குறிப்பிடுவதாவது,"தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள ‘இரட்டை இலை’ சின்ன விவகாரம் குறித்து உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்குவதாகக் கூறப்படும் பிரிவு உண்மையான அதிமுக அல்ல.அதிமுகவின் உண்மை நிலையை நிரூபிக்க எனக்கான அவகாசம் வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், செங்கோட்டையனின் இந்த கடிதம், அதிமுக அரசியல் பரப்பில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கட்சியின் உள்ளக மோதல் மீண்டும் தீவிரமடையும் வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
                                     
                                 
                   
                       English Summary
                       Sengottaiyan wrote dramatic letter Election Commission