தோனிக்கு நிகர் தோனிதான்.. கண் விழித்து போட்டியை பார்த்து சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்.! - Seithipunal
Seithipunal


சென்னை கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போட்டி என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதே போலவே நேற்றைய போட்டி கடைசி பந்து வரை பரபரப்பாகவே சென்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக திலக் வர்மா 51 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சூரியகுமாரி யாதவ் 32 ரன்னும், ஹிருத்திக் ஷாகீன் 25 ரன்கள் எடுத்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 156 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை உனத்கட் வீசினார். கடைசி ஓவரின் முதல் பந்தில் பிரெடோரியஸ் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய பிராவோ இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுத்து தோனிக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார். 

4 பந்தில் 16 ரன்கள் தேவைப்பட்டது. தோனி மூன்றாவது பந்தில் சிக்ஸர் அடித்தார். நான்காவது பந்தில் பவுண்டரி விளாசினார். ஐந்தாவது பந்தில் 2 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் 4 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே தள்ளப்பட்டது. இறுதிப் பந்தில் எம்எஸ் தோனி தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். 

இந்நிலையில், சுப்பிரமணியன் சுவாமி தோனியின் அசத்தல் ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், நேற்று இரவு எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் தோனி தனது வழக்கமான மேஜிக்கை செய்வாரா என்று கண் விழித்தேன். நேற்றிரவு பார்த்தது போன்ற சூப்பர் மேஜிக்கை நான் பள்ளியில் கிரிக்கெட் வீரராக இருந்த ஆண்டுகள் உட்பட என் வாழ்க்கையில் பார்த்ததில்லை. தோனிக்கு நிகர் தோனிதான் என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Subramanian Swamy tweet for Yesterday Match MS Dhoni Playing


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->